Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மலேரியாவுக்கு மருந்தாகும் ‘சின்கோனா’; 150 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கண்டுபிடிப்பு!

T

The Leader Desk

மே 24, 2025 • 4:19 PM

மலேரியாவுக்கு மருந்தாகும் ‘சின்கோனா’; 150 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கண்டுபிடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூலிகைத் தாவரங்கள், 150 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளன.
  • கடல் மட்டத்திலிருந்து சுமார் 742 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள உனனகல மலைகளில், நன்கு வளர்ந்த ஆறு தாவரங்களை ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார்.
  • அம்பகமுவவில் உள்ள அலியாகல மலைத்தொடரின் மேற்குச் சரிவுகளில் இருந்தே இந்த மூலிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மூலிகைத் தாவரங்கள், 150 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளன. அம்பகமுவவில் உள்ள அலியாகல மலைத்தொடரின் மேற்குச் சரிவுகளில் இருந்தே இந்த மூலிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலியாகல மலைத்தொடரில் இருந்து, இந்த சின்கோனா மூலிகைத் தாவரங்களை கண்டறிந்ததாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் லக்ஷ்மன் குமார தெரிவித்தார்.

1861ஆம் ஆண்டு ஹக்கல தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்கள் இந்தச் சின்கோனாவை பயிரிட்டதாகவும், குறுகிய காலத்திற்குள் அதை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.

இது இலங்கையில் அழிந்துபோன தாவர இனத்தைச் சேர்ந்தது. மேலும், ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஒரே ஒரு தாவரம் மட்டுமே பாதுகாக்கப்பட்டது. இருப்பினும், மத்திய மலைகளில் இந்த இனத்தைச் சேர்ந்த சில தாவரங்கள் இருக்கலாம் என்று சூழலியலாளர் நம்புகிறார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 742 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள உனனகல மலைகளில், நன்கு வளர்ந்த ஆறு தாவரங்களை ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறினார்.

மலேரியாவுக்கு மிகவும் பயனுள்ள மருந்தான க்வினீன் மருந்தைத் தயாரிக்க, சின்கோனா என்ற இந்த மருத்துவத் தாவரம் பயனப்டுத்தப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறினார்.

மலேரியாவிற்கான முதல் பயனுள்ள சிகிச்சைகளில் க்வினீன் ஒன்றாகும். மனிதர்கள் முதன்மைக் காடுகளை அழித்த பிறகு உருவாகும் இரண்டாம் நிலை காடுகளின் படையெடுப்பால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள ஒரு தாவர இனமான சின்கோனா போன்ற நன்கு வளர்ந்த பல தாவரங்களைக் கண்டுபிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சின்கோனா என்பது தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைகளுக்குச் சொந்தமான ஒரு தாவரமாகும். இந்த தாவரம், குறிப்பாக பெரு, ஈக்வடார், கொலம்பியா மற்றும் பொலிவியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

சின்கோனா மரங்களின் பட்டையில் க்வினீன் உள்ளது. இது, பல நூற்றாண்டுகளாக மலேரியா எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...