Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விசேட பயிற்சி செயலமர்வுக்காக மாணவியை அழைக்கச் சென்ற ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு!

T

The Leader Desk

மே 24, 2025 • 2:51 PM

விசேட பயிற்சி செயலமர்வுக்காக மாணவியை அழைக்கச் சென்ற ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
  • சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் சனிக்கிழமை (24) இடம்பெறவுள்ளது.
  • இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட ஆசிரியரை மாணவியின் சகோதரன் வாளால் வெட்டி தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார்.
எழுத்து அளவு:

இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் சனிக்கிழமை (24) இடம்பெறவுள்ளது.

விசேட பயிற்சி செயலமர்வுக்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஒன்றுகூடுமாறு, அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினம் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட ஆசிரியரை மாணவியின் சகோதரன் வாளால் வெட்டி தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார்.

ஆசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து, அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்போது அவர் மீதும் மாணவியின் சகோதரன் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன். அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.

இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் , அதிபர் ஆகிய இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...