Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

7 தசாப்த நடிப்புத் துறையிலிருந்து விடைபெற்ற மாலினி!

T

The Leader Desk

மே 24, 2025 • 4:50 AM

7 தசாப்த நடிப்புத் துறையிலிருந்து  விடைபெற்ற மாலினி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
  • மாலினி பொன்சேகா (Malini Fonseka0, இலங்கை சிங்கள நடிகையும் நாடகக் கலைஞரும், இயக்குநரும் ஆவார்.
  • ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திச லியன்சூரியாவின் புஞ்சி பபா திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.
எழுத்து அளவு:

அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

மாலினி பொன்சேகா (Malini Fonseka0, இலங்கை சிங்கள நடிகையும் நாடகக் கலைஞரும், இயக்குநரும் ஆவார். "இலங்கை சினிமாவின் ராணி" என்று பெரும்பாலும் கருதப்படும் இவர், 1969ஆம் ஆண்டு தேசிய மாநில நாடக விழாவில் 'சிறந்த நடிகை விருதை' வென்றதன் மூலம் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார், அதைத் தொடர்ந்து 1980இல் ‘ஹிங்கன கொல்லா’, 1982இல் ‘ஆராதனா’, 1983இல் ‘யச இசுரு’ ஆகிய படங்களுக்காக சரசவிய சிறந்த நடிகை விருதுகளை வென்றார்.

ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திச லியன்சூரியாவின் புஞ்சி பபா திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பன்னிரண்டு முறை மிகவும் பிரபலமான நடிகைக்கான சிலிம் நீல்சன் மக்கள் விருதையும் வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.

2010ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார். 1978ஆம் ஆண்டு “ஃபைலட் பிரேம்நாத்” தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

இவர் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர் அளித்த வலுவான ஆதரவைப் பாராட்டி இந்தப் பதவி வழங்கப்பட்டது.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • யார் அவள் (1976, மொழி மாற்றத் திரைப்படம்)
  • பைலட் பிரேம்நாத் (1978)
  • மல்லிகை மோகினி (1979)
  • பனி மலர்கள் (1981)

இறப்பு

மாலினி பொன்சேகா, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2025 மே 24 அன்று அதிகாலை தனது 78ஆவது அகவையில் காலமானார்.

தனிப்பட்ட விவரங்கள்

பிறப்பு: வன்னி ஆராச்சிகே மாலினி சினேகலதா பொன்சேகா -30 ஏப்ரல் 1947 பேலியகொடை, களனி, இலங்கை

இறப்பு: மே 24, 2025 (அகவை 78) கொழும்பு - இலங்கை

துணைவர்: உபாலி சேனநாயக்க (தி. 1965; மணமுறிவு - 1973), லக்கி டயஸ் (தி. 1986; ம.மு. 2011)

பெற்றோர்: கில்பர்ட் பொன்சேகா (தந்தை), சீலாவதி பொன்சேகா (தாய்)

பணி: நடிகை

விருதுகள்: சிறந்த நடிகைக்கான சரசவிய விருது, மிகவும் பிரபலமான நடிகைக்கான சரசவிய விருது

mali.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...