Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்!

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2025 • 1:03 PM

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St.
  • இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு இன்று (24) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
  • ஏப்ரல் 26 நடைபெறும் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று(23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
எழுத்து அளவு:

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு இன்று (24) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஏப்ரல் 26 நடைபெறும் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று(23) காலை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில், இன்றையதினம் அவர் பாப்பரசர் பிரான்சிஸிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி வெற்றிடமாகியுள்ள பாப்பரசர் பதவிக்கான மாநாட்டில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த 21ஆம் திகதி தனது 88ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

இந்தநிலையில், நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

WhatsApp-Image-2025-04-24-at-4.46.59-PM-1.jpeg

 

WhatsApp-Image-2025-04-24-at-4.46.59-PM.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஏப்ரல் 26 தேசிய துக்க தினம்! | Tamil Leader | We Lead the Nation