Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர், ஊடக ஆலோசகர் நியமனம்

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2025 • 1:36 PM

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர், ஊடக ஆலோசகர் நியமனம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
  • இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.
  • பிரபல ஊடகவியலாளரான சந்தன சூரியபண்டார 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார்.
எழுத்து அளவு:

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

PMD_01.jpg

ஜனாதிபதி ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டாரவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமனம்

ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர்  சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு  ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

PMD_02.jpg

பிரபல ஊடகவியலாளரான சந்தன சூரியபண்டார 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை ஊடகத்துறையில்  குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். ஊடகத் துறை தொடர்பிலான பரந்த அறிவுடன் கூடிய  தலைசிறந்த தகவல் தொடர்பாளராக பார்வையாளர்களின் மனங்களை வென்றுள்ள அவர் எழுத்தாளருமாவார்.

PMD03.jpg

உள்நாட்டு ஊடக புகைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ள அநுருத்த லொகுஹபுஆரச்சி, சர்வதேச ரொய்டர் செய்திச் சேவையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சேவையாற்றி டிஜிடல் புகைப்படத்துறையை எமது நாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவர் புகைப்படப்பிடிப்பு மற்றும் டிஜிடல் புகைப்படத்துறை தொடர்பான சிறப்பு பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...