Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தேசபந்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி நிர்ணயம்

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2025 • 5:04 AM

தேசபந்துக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி நிர்ணயம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தென்னகோன், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
  • நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில், இன்று (24) அழைக்கப்பட்டன.
  • எனவே, இந்த மனுவை விரைவாக விசாரிக்க திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.
  • முன்வைக்கப்பட்ட விடயதானங்களை கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
எழுத்து அளவு:

தென்னகோன், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த மனுக்கள், நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில், இன்று (24) அழைக்கப்பட்டன.

பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே, இந்த மனுவை விரைவாக விசாரிக்க திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.

முன்வைக்கப்பட்ட விடயதானங்களை கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.

கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிற கட்சிகளால் மேற்படி ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணானவை என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மேற்படி பரிந்துரைகளின் அடிப்படையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கும் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...