கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் கிழக்கின் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு எழத் தொடங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

முகாவின் தலைவர் ரவூப் ஹக்கீம் சஜீத் பிரமதாஸவோடு இணைந்து கிழக்கு மாகாண தேர்தலை எதிர்கொள்வதென்றும். முன்னாள் அமைச்சர் ஹஸனலி தரப்பினர் தமிழ் தேசியத்தோடு இணைந்து கொள்வது என்ற நிலைப்பாட்டிலும். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தரப்பினர் அரசாங்கத்தோடு இணைவதன் மூலமே நமது சமூகத்திற்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கும் என்ற கருத்திலும் இருந்து வருகின்றனர்.

வடகிழக்கு எமது தமிழ் தேசியம் என்ற கோட்பாட்டோடு பயணிக்கும் தரப்போடு முஸ்லிம் சமூகம் எப்படி இணைவது.இதற்கான வெளிப்பாடுகள் என்ன? என்பதை தமிழ் சமூகம் கூற வேண்டும்.

ரவூப் ஹக்கீமின் சிந்தனைகள் சஜீத் என்பதால் இக் கூட்டு வெற்றியைத் தொடுமா? அல்லது இவற்றால் சாதிக்க முடியுமா? என்பதும் கேள்வியே. மத்தியில் வேறு அரசாங்கம் உள்ள போது மாகாணத்தில் எப்படி ஆட்சியை கொண்டு நடாத்துவது என்ற ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் மூன்றாவது யோசனையை எடுத்துக் கொண்டால் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் மஹிந்த அரசாங்கத்தோடு  ஒன்றிணைந்து போவதா? இது எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும்.நாம் எதிர் நோக்கும் இனமுரண்பாட்டிற்கான தீர்வாக இது அமையுமா? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியம் என்ற நான்காவது யோசனையை நான் முன்வைக்கிறேன்.

சுயநலங்களைத்தாண்டி இதில் எத்திட்டம் சமூகத்திற்கு உகந்தது என்ற அடிப்படையில்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நாம் முகங்கொடுக்க வேண்டும். சமூகம் ஒற்றுமைப்படும் போது எனது பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி