ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளாந்தம் காலை நேரத்தில் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி