Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணியில் மேலும் பல சிசுக்கள், சிறார்களுடைய எலும்புக்கூடுகள்; பால் போத்தலும் மீட்பு!

T

The Leader Desk

ஜூலை 23, 2025 • 3:28 AM

செம்மணியில் மேலும் பல சிசுக்கள், சிறார்களுடைய எலும்புக்கூடுகள்; பால் போத்தலும் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள் உட்பட 8 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
  • இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.
  • அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடயவியல் அகழ்வாராய்ச்சித் தளம் இரண்டாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின.
  • செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
எழுத்து அளவு:

எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள் உட்பட 8 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டிலிருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலை ஒத்த பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடயவியல் அகழ்வாராய்ச்சித் தளம் இரண்டாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின.

அங்கு நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலை ஒத்த பொருள் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வின் பின்னரே இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறும்.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின்போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 6 - 7 வரையான என்புத் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 80 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் எஸ்.லெனின்குமாரின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.

அதேவேளை, நேற்றைய அகழ்வுப் பணிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம், தொல்லியல் துறை விரிவுரையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

519948127_713767344891694_619535251420309151_n.jpg

 

518389846_2143138576113233_2501604426168704504_n.jpg

 

518413415_1163628315797324_8664891309937071171_n.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...