Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சக மாணவனை சாகும் வரை கொடுமைப்படுத்திய 11 பேர் கைது!

T

The Leader Desk

ஏப்ரல் 23, 2025 • 4:22 AM

சக மாணவனை சாகும் வரை கொடுமைப்படுத்திய 11 பேர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குருநாகல் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மாணவன் தொடர்பான செய்திகள், தற்போது வைரலாகியுள்ளன.
  • உயிரிழந்தவர், குருநாகல் - புலுவல மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்ற திலின விராஜ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
  • கடந்த 16ஆம் திகதி வெலேகெதர - ரிதிகம - அன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
  • பாதுகாப்புத் தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) மாணவனின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ள அவர்கள், அம்மாணவன் மயக்கமடைந்ததை விட்டுச் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:

குருநாகல் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட 7 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மாணவன் தொடர்பான செய்திகள், தற்போது வைரலாகியுள்ளன. குருநாகல் - ரிதீகம - வெலகெதர - ஷகரலியவத்த பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர், குருநாகல் - புலுவல மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்ற திலின விராஜ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி வெலேகெதர - ரிதிகம - அன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதும் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்றும், வெளியாட்கள் குழுவொன்றும், தனிப்பட்ட தகராறின் அடிப்படையில் திலின செல்லும் வழியில் காத்திருந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

பாதுகாப்புத் தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) மாணவனின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ள அவர்கள், அம்மாணவன் மயக்கமடைந்ததை விட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து, மாவதகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், நேற்று உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் வெளியானதை அடுத்து, வெளிநாட்டில் இருந்த திலினவின் தாயார் வீடு திரும்பியுள்ளார். மாணவர் மீதான தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனைத் தாக்கிய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்யக்கோரி, ஷகரலிவத்த பகுதி மக்கள், இன்று குருநாகல் - வெலகெதர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...