Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

தையிட்டி விகாரையில் சட்டவிரோதக் கட்டடம்: போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

T

The Leader Desk

மார்ச் 23, 2025 • 2:13 PM

தையிட்டி விகாரையில் சட்டவிரோதக் கட்டடம்: போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முழு முயற்சியுடன் அமைக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
  • இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு யாழ்.
  • இதற்குத் எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்து அளவு:

முழு முயற்சியுடன் அமைக்கப்பட்ட சட்டவிரோதக் கட்டடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இதற்குத் எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அங்கு கைவிலங்குகளுடன் வந்திருந்த பொலிஸார், போராட்டக்காரர்களைக் கைது செய்வோம் என்று மிரட்டினர்.

திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்தசாசன அமைச்சர் சுனில் செனவி அறிவித்திருந்த நிலையில், அங்கு சட்டவிரோதக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறு சில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு யாழ். மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்தார். தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார் என்றும், அவ்வாறான சட்டவிரோதக் கட்டடங்கள் எவையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டு வந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டன. அந்தக் கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாகக் கட்டடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாகப் பலரும் விமர்சித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசு, எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...