13 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புர்கா தடைச் சட்டத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையானது பாகிஸ்தான் தூதுவரின் அழுத்தத்தை அடுத்து அவரது நடவடிக்கையை சுருட்டிக்கொண்டுள்ளார்.

இவரது இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பெரும்பாலான விமர்சனங்களை அரச சார்பு சமூக ஊடகங்களே முன்வைத்துள்ளன

 

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளன

 

மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது

அனைத்து பிரஜைகளுக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது

பாதாள உலகம் அழிக்கப்பட்டது

காவல்துறை மேம்படுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபட்டனர்

பாலியல் பலாத்காரங்கள் ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன

புர்கா தடை செய்யப்பட்டது

மத்ரசா பாடசாலைகள் தடை செய்யப்பட்டன

அவர் தனது வாய் வார்த்தையால் சொல்வதை செயலில் செய்ய முடியாது

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான திட்டம் தொடர்பான அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.

எவ்வாறாயினும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜயந்த கொழம்பகே  தெரிவிக்கையில், அத்தகைய தடையை விதிக்க அரசாங்கம் முடிவெடுக்கவில்லை, இது வெறும் முன்மொழிவு என்றும் தற்போது விவாதத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி