Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

23 நாட்களில் நாடாளுமன்றத்தின் செலவு 80 கோடி!

T

The Leader Desk

டிசம்பர் 18, 2021 • 5:27 PM

23 நாட்களில் நாடாளுமன்றத்தின் செலவு 80 கோடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கு அடுத்த நாள் அதாவது 13 ஆம் திகதியில் இருந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் ஆரம்பமாகி இருந்தது.
  • பின்னர கடந்த 10 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்புடன் நிறைவடைந்தன.
  • இதனடிப்படையில் 23 நாட்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடந்துள்ளது.
  • அதேவேளை வழமையாக நாடாளுமன்றத்தினை நடத்த நாள் ஒன்றுக்கு இரண்டு கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதற்கு அடுத்த நாள் அதாவது 13 ஆம் திகதியில் இருந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் ஆரம்பமாகி இருந்தது. பின்னர கடந்த 10 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்புடன் நிறைவடைந்தன. இதனடிப்படையில் 23 நாட்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடந்துள்ளது.

அதேவேளை வழமையாக நாடாளுமன்றத்தினை நடத்த நாள் ஒன்றுக்கு இரண்டு கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் நடைபெறும் போது, நீண்ட நேரம் நாடாளுமன்றம் இயங்கும்.

இதனால், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை விட அதிகளவான பணம் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், உணவு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள், கடிதம் உட்பட காகிதாதிகளை வழங்குதல் போன்றவற்றுக்காக இந்த பணம் செலவாகிறது.

அத்துடன் வரவு செலவுத்திட்டம் நடைபெறும் நாட்களில் நாடாளுமன்ற அவை மற்றும் ஏனைய இடங்களில் குளிரூட்டிகள் தொடரந்தும் இயங்கும் என்பதால், மின்சாரத்திற்காக அதிகளவில் செலவாகின்றது.

இதனிடையே சாதாரண நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மீனுடன் கூடிய உணவுக்காக 951 ரூபாய் செலவிடப்படுவதுடன் காய்கறியுடன் கூடிய உணவுக்கு 629 ரூபாய் செலவிடப்படுகிறதாக நாடாளுமன்ற கணக்காய்வுப் பிரிவு கூறியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...