Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு!

T

The Leader Desk

ஜூலை 22, 2025 • 12:38 PM

தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவற்றில் ஒரு யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • இதேவேளை, காட்டு யானை - மனித மோதலைக் குறைக்கப்பதற்காக 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தாதிருக்கிறீர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (22) பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கேட்கப்பட்ட கேள்விகள், 01.
  • கடந்த 5 வருடங்களில் மனித - யானை மோதலால் எத்தனை மனித உயிர்கள் மற்றும் காட்டு யானைகள் பலியாகியுள்ளன அவை யாவை?
எழுத்து அளவு:

அவற்றில் ஒரு யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த யானை இறப்புகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனல்.

காட்டு யானை - மனித மோதலைத் தீர்க்க தீர்வு யாது?

இதேவேளை, காட்டு யானை - மனித மோதலைக் குறைக்கப்பதற்காக 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தாதிருக்கிறீர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (22) பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் மனித - யானை மோதல்களின் தீவிர போக்கையும், காட்டு யானை பாதுகாப்பில் நிலவி வரும் சிக்கலான சூழ்நிலையையும் நாம் கண்டிருக்கிறோம். மனித-யானை மோதல்களால் அண்மைய நாட்களில் மனித உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள், பயிர் அழிவுகள் மற்றும் யானையின் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இருப்பினும், இந்த மோதல்களால் ஏற்படும் பாதகம் விளைவிக்கும் சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான பொருத்தமான நிலைபேறான வேலைத்திட்டத்தை இன்னும் ஆரம்பிக்க முடியவில்லை என்பது அவதானிக்கப்பட்டதால், நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைக் கேட்டறியும் நோக்கத்துடன் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறேன்.

கேட்கப்பட்ட கேள்விகள்,

01. நமது நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் எத்தனை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன? அந்தத் தரவுகளை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இதன்படி, நாட்டில் காணப்படும் மொத்த யானைகளின் சதவீதம் யாது?

02. காட்டு யானை - மனித மோதலைத் தீர்க்க 2020 இல் வகுக்கப்பட்ட தீர்வு யாது? இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

03. குறித்த திட்டத்தை செயல்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எந்த காலக்கெடுவிற்குள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

04. கடந்த 5 வருடங்களில் மனித - யானை மோதலால் எத்தனை மனித உயிர்கள் மற்றும் காட்டு யானைகள் பலியாகியுள்ளன அவை யாவை?

05. இதனால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு ? இதைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவை?

06. காட்டு யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க காணப்படும் சட்டங்கள் யாவை? இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் யாவை?

07. விலங்கின நலன் பேணல் சட்டம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

08. காட்டு யானை - மனித மோதலைக் குறைக்க வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் தலைமையிலான பணியாளர்கள் (பௌதீக/மனித வளங்கள்) வனஜீவராசிகள் வலய மட்டத்தில் எவ்வளவு ? இது போதும் என்று அரசாங்கம் கருதுகிறதா? போன்றவனாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு! | Tamil Leader | We Lead the Nation