Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

T

The Leader Desk

ஜூன் 22, 2025 • 2:25 AM

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
  • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.
  • அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன.
  • இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

"ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்" என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

"அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/realDonaldTrump/status/1936573183634645387/photo/1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...