Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புதிய 'COVID-19 'பற்றி அச்சம் வேண்டாம்!

T

The Leader Desk

மே 22, 2025 • 12:46 PM

புதிய 'COVID-19 'பற்றி அச்சம் வேண்டாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
  • கடந்த சில வாரங்களாக பல ஆசிய நாடுகளில் 'COVID-19' தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இந்த நோயைச் சமாளிக்கும் திறன் அங்கு குறைவாக காணப்படுவதுடன் பல காரணிகள் இந்த பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • மேலும், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் 'COVID-19' க்கான மருத்துவ மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • தற்போது 'COVID-19' நோயாளிகளில் அதிகரிப்பு நாட்டினுள் இல்லை என்றும், இலங்கையில் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் துறையின் தரவுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பல ஆசிய நாடுகளில் 'COVID-19' தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இந்த நோயைச் சமாளிக்கும் திறன் அங்கு குறைவாக காணப்படுவதுடன் பல காரணிகள் இந்த பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் தேசிய அளவில் தயார்படுத்தலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் 'COVID-19' க்கான மருத்துவ மாதிரிகள் பரிசோதிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 'COVID-19' நோயாளிகளில் அதிகரிப்பு நாட்டினுள் இல்லை என்றும், இலங்கையில் ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண தேவையான ஆய்வக கண்காணிப்பு அமைப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முதியவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உள்ளிட்டவை எல்லா நேரங்களிலும் அடிப்படை சுகாதார நடைமுறைகள் மற்றும் சுவாச நெறிமுறைகளை பின்பற்றுமாறும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...