Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இன்று இலங்கையின் 53ஆவது குடியரசு தினம்!

T

The Leader Desk

மே 22, 2025 • 4:23 AM

இன்று இலங்கையின் 53ஆவது குடியரசு தினம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும், அது முழு சுதந்திரமாக இருக்கவில்லை.
  • ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி, சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
  • பிரித்தானிய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற்று, 'சிலோன்' என்ற பெயர் நீக்கப்பட்டு, 'ஸ்ரீலங்கா' என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டு, இந்நாடு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசானது 1972 மே 22ஆம் திகதியாகும்.
  • அன்றைய தினம் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி பொதுமக்கள் கோலாகலமான கொண்டாடினர்.
எழுத்து அளவு:

1948இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும், அது முழு சுதந்திரமாக இருக்கவில்லை.

1972ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி, சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற்று, 'சிலோன்' என்ற பெயர் நீக்கப்பட்டு, 'ஸ்ரீலங்கா' என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டு, இந்நாடு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசானது 1972 மே 22ஆம் திகதியாகும். அன்றைய தினம் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, பாற்சோறு பொங்கி பொதுமக்கள் கோலாகலமான கொண்டாடினர்.

அதற்கடுத்து, இலங்கை குடியரசாகி ஓராண்டு நிறைவை முன்னிட்டு 1973ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி முதலாவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், இலங்கையின் முதலாவது குடியரசு தினம் எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று, அப்போதைய வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கு காணலாம்.

1.jpg

 

2.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...