Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அடுத்த பாப்பரசருக்கான அறுவர் பட்டியலில் இலங்கையின் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஐந்தாவது இடம்!

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2025 • 3:54 AM

அடுத்த பாப்பரசருக்கான அறுவர் பட்டியலில் இலங்கையின் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஐந்தாவது இடம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன.
  • அதற்கு இன்னும் 15 முதல் 20 நாள்கள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வழக்கமாக சுமார் 120 இற்கு உட்பட்ட கர்தினால்கள் கொண்ட கர்தினால்கள் அவையே புதிய பாப்பரசரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யும்.
  • எனினும், தற்போது 135 கர்தினால்கள் வாக்களிக்கக் கூடிய தகுதியில் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.
எழுத்து அளவு:

புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

காலமான பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியைகள் முடிவடைந்த பின்னர் புதிய பாப்பரசர் தெரிவு ரோமில் நடைபெறும்.

தற்போதைய பாப்பரசரின் மறைவையொட்டி ஒன்பது நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். அதன் பின்னர் புதிய பாப்பரசர் தெரிவு இடம்பெறும். அதற்கு இன்னும் 15 முதல் 20 நாள்கள் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமாக சுமார் 120 இற்கு உட்பட்ட கர்தினால்கள் கொண்ட கர்தினால்கள் அவையே புதிய பாப்பரசரை வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யும். எனினும், தற்போது 135 கர்தினால்கள் வாக்களிக்கக் கூடிய தகுதியில் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் அனைவரையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.

அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் பலவித செய்திகள் உலக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றான நியூயோர் போஸ்ட் வெளியிட்ட ஊகத்தில் முதல் ஆறு நிலைகளில் உள்ள கர்தினால்களில் ஐந்தாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு கர்தினாலான பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பத்திரிகை வெளியிட்ட பட்டியலின் ஒழுங்கு விதி வருமாறு:-

01. கர்தினால் லுயிஸ் டக்ளே (67 வயது - பிலிப்பீன்ஸ்)

02. கர்தினால் பிற்றோ பரொலின் (70 வயது - இத்தாலி)

03. கர்தினால் ஜீன் மார்க் அவலின் (66 வயது - பிலிப்பீன்ஸ்)

04. கர்தினால் வில்லியம் ஜக்கோபஸ் இஜிக் (71 வயது - டென்மார்க்)

05. கர்தினால் மெல்கம் ரஞ்சித் (வயது 77 - இலங்கை)

06. கர்தினால் றொபர்ட் சரா (வயது 79 - கயானா)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...