Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டுக்குள் இயங்கும் குற்றக் கும்பல்கள் பற்றி தகவல் வெளியிட்ட பாதுகாப்புத் தரப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2025 • 6:36 AM

நாட்டுக்குள் இயங்கும் குற்றக் கும்பல்கள் பற்றி தகவல் வெளியிட்ட பாதுகாப்புத் தரப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர், ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐந்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
  • இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் ஆயுத தாக்குதல் சம்பவங்களில் 17 சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
  • சில சம்பவங்களில் பொலிஸார் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர், ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐந்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் ஆயுத தாக்குதல் சம்பவங்களில் 17 சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

சில சம்பவங்களில் பொலிஸார் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்பாக்கிகள் நான்கும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

1997 என்ற இலக்கம் ஊடாக இதுபோன்ற தகவல்களை வழங்க முடியும் என்றும் டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் எனவும் கூறிய பதில் பொலிஸ்மா அதிபர், தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...