Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

டட்லி சிறிசேனவுக்கு ஆப்பு தயார்!

T

The Leader Desk

ஜூலை 21, 2025 • 2:48 AM

டட்லி சிறிசேனவுக்கு ஆப்பு தயார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இல்லாவிட்டால், யாராக இருந்தாலும் அவை அகற்றப்படும்.
  • கடந்த மாதத்திலிருந்து நாம் ஒரு நெல்லை 120 ரூபாய்க்கு வாங்குவோம் என்றோம்.
  • அவர், 130 முதல் 140 ரூபாய்க்கு வாங்கினர்.
  • “அநுராதபுரம், நுவரவெவ, கந்தளாய்க் குளம், கிரித்தலே குளம், புத்தளம் தப்போவ குளம், வாரியபொல தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பொலன்னறுவை மின்னேரிய குளம், ஹம்பாந்தோட்டை திஸ்ஸ ஏரி உள்ளிட்ட 22 ஏரிகளின் இருப்பு எல்லைகள் குறிக்கப்பட உள்ளன.
எழுத்து அளவு:

இல்லாவிட்டால், யாராக இருந்தாலும் அவை அகற்றப்படும். அது டட்லி சிறிசேனவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு எவரும் பெரிதில்லை” என்று, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

“அவர் நமக்கு அரிசி வழங்கும் துறையில் பெரியவர். அந்தத் துறையில் மதிப்பு மிக்கவர். மக்கள் அவரைத் திட்டினாலும், அந்த ஆள் இல்லை என்றால், நாம் கல்லைத்தான் கவ்வவேண்டி வரும். இலங்கை மக்களுக்கு ஒரு கல் கூட கிடைக்காத வகையில் அரிசியை சந்தைக்கு வழங்கியவர் டட்லி சிறிசேன. அந்த மனிதர் ஒரு வேலை செய்திருக்கிறார். ஒரு விலைமதிப்பற்ற மனிதன். ஆனால் அவரிடத்தில் எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது.

“விவசாயிகளிடம் அரிசி வாங்கும் போது, சில சமயங்களில் விவசாயிக்கு உரிய விலை வழங்கவில்லை. கடந்த மாதத்திலிருந்து நாம் ஒரு நெல்லை 120 ரூபாய்க்கு வாங்குவோம் என்றோம். அவர், 130 முதல் 140 ரூபாய்க்கு வாங்கினர்.

“அடுத்ததாக, வாடிக்கையாளர் நெல்லை வாங்கிச் சாப்பிடுகிறாரா என்பதுதான் எங்களுக்குள்ள கேள்வியாக இருக்கிறது. நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினை அது மட்டுமே. இந்தச் சிக்கல் இல்லாவிட்டால், இந்த நாட்டிற்கான குறிப்பிடத்தக்க தேசிய பொறுப்பை நிறைவேற்றியவர் அவர். அந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என்றார் அமைச்சர்.

“அநுராதபுரம், நுவரவெவ, கந்தளாய்க் குளம், கிரித்தலே குளம், புத்தளம் தப்போவ குளம், வாரியபொல தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பொலன்னறுவை மின்னேரிய குளம், ஹம்பாந்தோட்டை திஸ்ஸ ஏரி உள்ளிட்ட 22 ஏரிகளின் இருப்பு எல்லைகள் குறிக்கப்பட உள்ளன. அதன்படி நேற்று முன்தினம் (19) முதல், அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரத்தில் உள்ள ஏரி எல்லையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் குழுவொன்று ஆராய்ந்து அந்த நிர்மாணங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என நீர்ப்பாசன மற்றும் காணி பிரதியமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...