Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தெரிவுப் பாடமாக்கப்பட்ட வரலாறு, அழகியல்: தொடர்ந்து வெடிக்கும் எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜூலை 21, 2025 • 2:13 AM

தெரிவுப் பாடமாக்கப்பட்ட வரலாறு, அழகியல்: தொடர்ந்து வெடிக்கும் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.
  • புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய 10 மற்றும் 11ஆம் தரங்களில் கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவு செய்யப்படும் பாடப் பட்டியலில் சேர்ப்பதற்கே இவ்வாறு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.
  • இதேவேளை, வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் நேற்று (19) தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.

புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய 10 மற்றும் 11ஆம் தரங்களில் கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவு செய்யப்படும் பாடப் பட்டியலில் சேர்ப்பதற்கே இவ்வாறு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.

சாதாரண தரத்தில் வரலாறு கட்டாயப் பாடமாக இருப்பது அவசியம் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் தென்னிலங்கை பிரதம சங்கநாயக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் நேற்று (19) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், வரலாற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தேரர்கள் குழுவொன்று, இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து குறித்த பாடப் பிரச்சினை குறித்து கலந்துரையாடி உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தெரிவுப் பாடமாக்கப்பட்ட வரலாறு, அழகியல்: தொடர்ந்து வெடிக்கும் எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation