Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தமிழ் மக்களின் காதில் பூ சுற்றுவதற்கான அடுத்தகட்ட தந்திரத்தை ஆரம்பித்திருக்கும் அநுர அரசு!

T

The Leader Desk

மே 21, 2025 • 2:27 PM

தமிழ் மக்களின் காதில் பூ சுற்றுவதற்கான அடுத்தகட்ட தந்திரத்தை ஆரம்பித்திருக்கும் அநுர அரசு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தக் காணி கபளீகரத்துக்கு வழிசெய்யும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • மூன்று மாத காலத்துக்குள் உரித்துக்களை உறுதிப்படுத்தாவிடின் தமிழ் மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
  • அதுதான் அரசின் அடுத்தகட்ட ஏமாற்றுத் தந்திர வேலை.
எழுத்து அளவு:

பண்ணுவதற்கு - தந்திரமாகக் காய் நகர்த்தியிருக்கும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான சிங்கள - பௌத்த பேரினவாத அரசு, அந்த எத்தனத்துக்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்புக் கடுமையாகக் கிளம்பியிருப்பதன் பின்னணியில், அதைச் சமாளிப்பதற்கும் அதனை ஒட்டி தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றுவதற்கும் அடுத்தகட்டத் தந்திரத்தை ஆரம்பித்திருக்கின்றது.

அந்தக் காணி கபளீகரத்துக்கு வழிசெய்யும் வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதுதான் அரசின் அடுத்தகட்ட ஏமாற்றுத் தந்திர வேலை. இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் என மீள வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் கீழ் சம்பந்தப்பட்ட காணிகளுக்கா ன உரிமையை நிறுவுவதற்குத் தவறும் பட்சத்தில் அல்லது காணிகளுக்கு உரிமை கோராதவிடத்து, அக்காணிகள் கட்டாயமாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என, காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 5 (1)ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆகவே, அரசாங்கம் அறிவித்துள்ளவாறு, தற்காலிக இடைநிறுத்தம் எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது, ஆகையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

‘‘காணிக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இந்த வர்த்தமானியை இடைநிறுத்த முடியாது. அதற்கான சட்ட ஏற்பாடுகள் ஏதும் கிடையாது. மூன்று மாத காலத்துக்குள் உரித்துக்களை உறுதிப்படுத்தாவிடின் தமிழ் மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அரசுடமையாக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். ஆகவே, இந்த வர்த்தமானியை மீளப்பெற வேண்டும்.

அதுவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி’’ - என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழ் மக்களின் காணிகளைப் பிடுங்கும் இந்த அரச அடாவடித்தனம் இங்கு அரங்கேறும் போது, ஆளும் தரப்புக்குச் செம்புகாவும் மூன்று யாழ் மாவட்ட எம்.பிக்களும், நியமன எம்.பி பதவி மூலமான ஓர் அமைச்சரும் இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்காமல் பம்மிக்கொண்டிருக்கின்றனர்.

இப்போதாவது உண்மையை உணர்ந்து - ஆளுந்தரப்புக்கு சாமரம் வீசும் சின்னத்தனத்திலிருந்து வெளியே வந்து - அவர்கள் தமிழ் மக்களின் உரித்துக் குறித்துக் குரல் எழுப்ப வேண்டும். அதுதான் தங்கள் மக்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய நியாயமாகும்.

-முரசு ஆசிரியர் தலையங்கம்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...