Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தாமதிக்கும் நீதி, மறுக்கப்படும் நீதிக்கு சமமானது!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2025 • 3:49 AM

தாமதிக்கும் நீதி, மறுக்கப்படும் நீதிக்கு சமமானது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைப்புகளின் கூட்டு, நீதி, உண்மை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புனிதமான நினைவு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • அவர்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் நம்பிக்கையின் கொள்கைகளையும் மதிப்புகளையும் முற்றிலுமாக மீறுவதாகும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
  • இந்த அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் சபை, அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளன மாநாடு மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

அமைப்புகளின் கூட்டு, நீதி, உண்மை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புனிதமான நினைவு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள், சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களையும் அவற்றை நடத்தியவர்களையும் முழுமையாக நிராகரிப்பதற்கான சமூகத்தின் நீண்டகால நிலைப்பாட்டை இந்த கூட்டு அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான தாக்குதல்களை, திட்டவட்டமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் மீண்டும் கண்டிப்பதாக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களின் நடவடிக்கைகள் இஸ்லாத்தின் நம்பிக்கையின் கொள்கைகளையும் மதிப்புகளையும் முற்றிலுமாக மீறுவதாகும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, முஸ்லிம்கள் இந்த மண்ணில் விசுவாசமான, அமைதியான, ஆர்வமுள்ள மற்றும் பங்களிக்கும் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில், குறிப்பிடத்தக்க அநீதிகள், பாகுபாடு மற்றும் அவதூறுகளை எதிர்கொண்ட போதிலும், முஸ்லிம் சமூகம், எப்போதும் பொறுமை மற்றும் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது, தீவிரவாதம் அல்லது வன்முறையால் ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பயங்கரவாத செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தை அவதூறு செய்வதற்கும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதற்கும், ஓரங்கட்டுவதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எனவே இந்த விடயத்தில் நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்று முஸ்லிம் அமைப்புக்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் சபை, அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளன மாநாடு மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...