Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2025 • 3:40 AM

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
  • இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.30 மணி முதல் இடம்பெற்று வருகிறது.
எழுத்து அளவு:

சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், அதே நாளில் தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன..

இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.30 மணி முதல் இடம்பெற்று வருகிறது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்ககேற்றுள்ளனர்.

இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 8.45 மணிக்கு அனைத்து மத ஸ்தலங்களிலும் மணி அடிக்கப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...