Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

யாழில் 22 கட்சிகள், 13 சுயேச்சைகள் 'அவுட்': சங்கு, மான், சைக்கிள், அர்ச்சுனா அணி அதிர்ச்சி!

T

The Leader Desk

மார்ச் 21, 2025 • 6:57 AM

யாழில் 22 கட்சிகள், 13 சுயேச்சைகள் 'அவுட்': சங்கு, மான், சைக்கிள், அர்ச்சுனா அணி அதிர்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தன.
  • இதில் 136 கட்சிகளும், 23 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தன.
  • அவற்றில் 22 கட்சிகளுடைய வேட்புமனுப் பத்திரங்களும், 13 சுயேச்சைக் குழுக்களுடைய வேட்புமனுப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்களும், 3 சபைகளில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்களும், 2 சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்புமனுக்களும், பல சபைகளில் அர்ச்சுனா அணியின் (சுயேச்சைக் குழு) வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மேற்படி தரப்புக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் அர்ச்சுனா அணி (சுயேச்சைக் குழு) தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனு மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விவரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தன.

இதில் 136 கட்சிகளும், 23 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 22 கட்சிகளுடைய வேட்புமனுப் பத்திரங்களும், 13 சுயேச்சைக் குழுக்களுடைய வேட்புமனுப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கௌசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் இராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை நகர சபைக்கான வேட்பு மனுவில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சாவகச்சேரி நகர சபைக்கான வேட்பு மனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீலங்கை கம்முனிஸ்ட் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொது ஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், அல்பிரட்ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ் தலைமையிலான சுயேச்சைக் குழுவும், குணரட்ணம் குகானந்தன் தலைமையிலான சுயேச்சைக் குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடருவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் அந்தக் கூட்டணியின் சார்பில் ஊடகங்களுக்குச் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போது, 'யாழ். மாவட்டத்தில் உள்ள இரண்டு சபைகளைத் தவிர ஏனைய 15 சபைகளுக்குமான வேட்புமனுக்களை நாம் கையளித்திருந்தோம். அவற்றில் பல சபைகளில் எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனுவில் 35 வயதுக்கு உட்பட்டவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் சில போட்டோ பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் கையளிக்கப்படவில்லை எனும் காரணத்தால் அவை நிராகரிக்கப்பட்டதாக எமக்குக் கூறப்பட்டுள்ளது.

அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள்தான் கையளிக்கப்பட்ட வேண்டும் எனக் கடந்த 15ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தற்போது கூறுகின்றார்கள்.

ஆனால், அது தொடர்பில் எமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை. இவை திட்டமிட்ட முறையில் எம்மை நிராகரிக்கச் செய்யப்பட்ட ஏற்படாகவே பார்க்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் எம்மை ஓரம் கட்டி விட்டு ஆளும் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை மாத்திரம் தேர்தலில் போட்டியிட வைக்கும் செயற்பாட்டைத் தேர்தல் திணைக்களம் செய்துள்ளதாகவே நாம் சந்தேகிக்கின்றோம்.

இது தொடர்பில் நாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்' என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...