Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கெசல்பத்தர பத்மேவின் தந்தை கொலைக்கு பழிதீர்க்கவே கணேமுல்ல சஞ்சீவ கொலை!

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2025 • 9:08 AM

கெசல்பத்தர பத்மேவின் தந்தை கொலைக்கு பழிதீர்க்கவே கணேமுல்ல சஞ்சீவ கொலை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
  • விசாரணையின் போது, ​​துப்பாக்கிதாரி, தானும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் கடந்த 17 ஆம் திகதி கடுவெலவில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலையைச் செய்த துப்பாக்கிதாரி அதே நாளில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்.

அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் சாரதியும் இதன்போது கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வேன் போலி இலக்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது, ​​துப்பாக்கிதாரி, தானும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணும் கடந்த 17 ஆம் திகதி கடுவெலவில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

அங்கு, ​​காரில் வந்த ஒருவர், துப்பாக்கிதாரிக்கும், குறித்த பெண்ணுக்கும் பொதி ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

துப்பாக்கிதாரி அணிந்திருந்த சட்டத்தரணி உடை உட்பட பல பொருட்கள் பொதியில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த அன்று காலையில் பொதியை கொடுத்த நபரால், துப்பாக்கிதாரியும் குறித்த பெண்ணும் ஹொண்டா ஃபிட்டில் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் துப்பாக்கிதாரிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் கைப்பற்றினர்.

கொலைக்கு முன்னும் பின்னும் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...