Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நுவரெலியாவில் மரக்கறி விலையை தீர்மானிக்க குழு நியமனம்

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2025 • 2:28 PM

நுவரெலியாவில் மரக்கறி விலையை தீர்மானிக்க குழு நியமனம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுவரெலியா மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் தலைமையில் 20.02.2025 அன்று மாவட்ட செயலக மிராக்கிள் மண்டபத்தில் நடைபெற்றது.
  • புதிதாக நியமிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் விவசாயக் குழுவில் உரையாற்றியதுடன், மாவட்டத்தில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கூறினார்.
  • இக்குழுவில் மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
எழுத்து அளவு:

நுவரெலியா மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் தலைமையில் 20.02.2025 அன்று மாவட்ட செயலக மிராக்கிள் மண்டபத்தில் நடைபெற்றது. இக்குழுவில் மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதிதாக நியமிக்கப்பட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் விவசாயக் குழுவில் உரையாற்றியதுடன், மாவட்டத்தில் விவசாயத் துறையின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கூறினார்.

நுவரெலியா பொருளாதார நிலையத்தில் மரக்கறி விலை நிர்ணயம் தொடர்பில் பொருளாதார நிலைய முகாமையாளர் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்ததுடன், விலை நிர்ணயம் செய்ய குழு ஒன்றின் அவசியத்தை மாவட்ட செயலாளர் சுட்டி காட்டியதுடன், குழு விரைவில் நியமிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன் விவசாயக் குழுவிற்கு கிடைத்த கடிதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.தினிகா கவி.சேகர (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் ஷாலிகா லிடகும்புர (காணி) மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான அரச அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய பொதுச்சேவை நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...