Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் முதல் 'நீர் மின்கலம்' மின்சார திட்டம் ஆரம்பம்!

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2025 • 5:56 AM

இலங்கையின் முதல் 'நீர் மின்கலம்' மின்சார திட்டம் ஆரம்பம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
  • மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின் கட்டமைப்பிற்குள் வழங்கும்.
  • ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை அடைவதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மொத்தம் 600 மெகாவோட் நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்த திட்டம், உபரி இருக்கும்போது சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் போது அதை மீண்டும் மின் கட்டமைப்பிற்குள் வழங்கும்.

2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாட்டின் இலக்கை அடைவதில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று மின்சார சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் அரநாயக்க மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை 2.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதையுடன் இணைக்கும் பாரிய அளவிலான எரிசக்தி சேமிப்பு அமைப்பாகும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய நாட்டின் பயணத்தில் எரிவாயு வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்தல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் என்ற இலக்கை அடையும் என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு திட்டத்தின் நிதி வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களில் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, நுகர்வோருக்கு குறைந்த விலையை உறுதி செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நீண்டகால நிதியைப் பெறுவதே இதன் நோக்கம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த திட்டத்தின் ஊடாக எரிசக்தி சுதந்திரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உறிஞ்சுவதற்கான அமைப்பு ஆதரவு, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...