Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
காணொளிகள்

விசர் நாய் கடித்தால் தொப்புளை சுற்றி 21 ஊசி போடுவது நினைவுக்கு வந்து ஓடி விடுவார்கள்

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2019 • 5:14 PM

விசர் நாய் கடித்தால்  தொப்புளை சுற்றி 21 ஊசி போடுவது நினைவுக்கு வந்து ஓடி விடுவார்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நினைவுக்கு வந்து ஓட்டம்பிடிப்பார்களா என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கௌதம புத்தரை பார்க்கும் போது எமக்கு ஒரு இறக்கம் ஏற்படும்.
  • விசர் நாய் ஒன்று இந்த இடத்திற்கு வந்தால் ஓடுவீர்களா தலையை தடவி கொடுப்பீர்களா?.விசர் நாய் கடித்தால் தொப்புளை சுற்றி 21 ஊசி போடுவது நினைவுக்கு வந்து ஓடி விடுவார்கள்.
எழுத்து அளவு:

நினைவுக்கு வந்து ஓட்டம்பிடிப்பார்களா என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை. கோத்தபாய மீது யாருக்கு அச்சமில்லை. அனைவருக்கும் அச்சம் இருக்கின்றது

>ஊடகவியலாளர்களுக்கும் அச்சம் உள்ளது. உங்களில் எத்தனை பேரை கொன்றார். 36 ஊடகவியலாளர்களை கொலை செய்தவரை ஊடகவியலாளர்கள் விரும்புவார்களா?. விரும்புவதில்லை. அவரை பார்க்கும் போது ஓடி விடுவார்கள்.

ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். கோத்தபாயவுக்கு மகிந்தவும் பயம். நாமல், ஷிரந்தி என அனைவரும் பயம்.</p><p>அவர் ஆட்சிக்கு வந்தால், தனக்கும் பிரச்சினையாகி விடும் என்பது நாமலுக்கு தெரியும். கோத்தபாய கட்டுப்பாடு இல்லாத மனுஷன். மகிந்த ராஜபக்ச இதனை அந்த காலத்தில் தனிப்பட்ட ரீதியில் கூறியுள்ளார்.கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதாம், அவருக்கு கோபம் வருமாம். லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யும் முன்னர் நடந்த தொலைபேசி உரையாடலின் பதிவுகள் இருக்கின்றன.

கௌதம புத்தரை பார்க்கும் போது எமக்கு ஒரு இறக்கம் ஏற்படும். புத்தரை பார்த்தால் மக்கள் அச்சம் கொள்ள மாட்டார்கள், காண்பதற்காக ஓடுவார்கள். யேசுவை பார்த்தால் மக்கள் அன்பில் அவரிடம் செல்வார்கள்.<p>விஜயகுமாரதுங்கவை பார்த்தால் மக்கள் அன்பு காரணமாக அவரிடம் சென்று அணைத்துக் கொள்வார்கள். ஆனால், கோத்தபாயவை பார்த்தால் மக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்கள்.

அது அவருடைய வரலாறு. அவர் கொலை செய்துள்ளார். கொள்ளையடித்துள்ளார். மக்கள் கோத்தபாயவுக்கு பயம், ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு பயம்.</p><p>நீதிமன்றம் என்றதும் அவர் தப்பியோடி விடுவார். நீதிமன்றம் என்றதும் இல்லாத நோய்கள் அவருக்கு ஏற்படும். நீதிமன்றத்திற்கு பயந்து சிங்கப்பூருக்கு ஒழிந்துக்கொண்டார். இவை எல்லாம் அனைவருக்கு தெரிந்த கதைகள்.</p><p>என்னிடம் நீங்கள் அச்சமின்றி பேசுகின்றீர்கள், கோத்தபாயவுடன் பேசும் போது உங்கள் கைகள் நடுங்கும். ஊடவியலாளர்கள் கோத்தபாயவிடம் கேள்வி கேட்க பயப்படுகின்றனர்.

அவரிடம் அவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான கேள்விகளை ஊடகவியலாளர் கேட்பதில்லை. விசர் நாய் ஒன்று இந்த இடத்திற்கு வந்தால் ஓடுவீர்களா தலையை தடவி கொடுப்பீர்களா?.விசர் நாய் கடித்தால்  தொப்புளை சுற்றி 21 ஊசி போடுவது நினைவுக்கு வந்து ஓடி விடுவார்கள். இப்படிதான் கோத்தபாய ராஜபக்ச வந்தாலும் பயந்து ஓடி விடுவார்கள் என ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...