அறிவியல் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்திலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதற்கு தற்போது நீடிக்கும் தொற்றுநோய் ஒரு சான்றாகும். அறிவியல், தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் உரிமையாளராகவும் தலைவர்களாகவும் பெண்களும் பெண்பிள்ளைகளும் இருக்கும்போதே இதனை அடைய முடியும்.

எதிர்வினை மற்றும் மீட்சியை நோக்கிய எமது பயணத்தில், கொவிட்-19 தடுப்பூசிகளை முன்னோடியாகக் கொண்டவர்களில் இலங்கை பெண் ஆராய்ச்சியாளர்களும் உள்ளடங்குகின்றனர். தொற்றுநோய்க்கு முன்னரே அறிவியலில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர். 2017ஆம் ஆண்டில்கூட அறிவியல், தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் ஆகிய துறைகளில் பட்டதாரிகளுக்கான சேர்க்கையில் ஏறத்தாழ அரைவாசிப்பேர் பெண்களாவர்.

எனினும், பால்நிலை தொடர்பான நிலைப்பாடு உள்ளிட்ட சமூக-கலாச்சார விதிமுறைகள் பெண்களை அறிவியல், தொழிநுட்பம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் துறைகளில் கற்பதை  தடுக்கின்றன. அறிவியலில் பால்நிலை சமத்துவத்தை அடைவதற்கு , முதலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் எந்தவொரு தொழிலையும் செய்ய முடியும் என்பது அங்கீகரிக்கப்படவேண்டும்;.

அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கான இந்த சர்வதேச தினத்தில் குறுகிய சிந்தனை மனப்பான்மையை தகர்த்தெறிந்து, மனநிலையை மாற்றி, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை தோற்கடிப்போம்.

நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய கடமையுண்டு. அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளை அதிகளவில் ஈடுபடுத்துவோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி