Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்!

T

The Leader Desk

ஜூலை 15, 2025 • 12:42 PM

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டிக்காரர் அட்டகாசம்; நிர்வாணமாக்கி சித்திரவதை; அடக்கிய நீதிமன்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பகுதிக்கு கடத்திச் சென்று, நிர்வாணமாக்கி, அவரை மோசமாக தாக்கி, சித்திரவதைகள் செய்துள்ளனர்.
  • விசாரணைகளின் பின்னர், கைதான நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • அத்தோடு, அந்த சித்திரவதைக் காட்சிகளை தமது போனில் காணொளியாகவும் அந்தக் கும்பல் பதிவு செய்துள் பணம் பெற்ற நபரை மிரட்டி, விடுவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

பகுதிக்கு கடத்திச் சென்று, நிர்வாணமாக்கி, அவரை மோசமாக தாக்கி, சித்திரவதைகள் செய்துள்ளனர்.

அத்தோடு, அந்த சித்திரவதைக் காட்சிகளை தமது போனில் காணொளியாகவும் அந்தக் கும்பல் பதிவு செய்துள் பணம் பெற்ற நபரை மிரட்டி, விடுவித்துள்ளனர்.

சித்திரவதை செய்து  கைப்பேசியில் காணொளி

பாதிக்கப்பட்ட நபர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

 

அவரது முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குடும்பஸ்தரை கடத்திச் சென்றமை, தாக்கியமை , சித்திரவதை செய்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட்டிக்கு பணம் கொடுத்த நபர் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணைகளை நடத்தினர்.

விசாரணைகளின் பின்னர், கைதான நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலை காணொளியாக பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை பகுப்பாய்வு செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த வருடமும் சம்பவங்கள்

கடந்த வருடமும், இதேபோன்று யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடன் பெற்றவரை நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதை செய்து, கைப்பேசியில் காணொளியாக பதிவேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றன.

 

அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், கந்து வட்டி கும்பலை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தற்போதும் அதே பாணியில் குற்றம் இழைத்த கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...