Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை

T

The Leader Desk

ஜூலை 15, 2025 • 3:50 AM

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினராவர்.
  • மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
  • முதல் 53 வயது வயதுக்கு இடைப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக் காயம் காரணமாகவுள்ளது.
எழுத்து அளவு:

சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினராவர்.

எலும்புக்கூடுகளாகத் தோண்டி எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெடிப்புக் காயங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக, ஆரம்பக்கட்ட பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

12 முதல் 53 வயது வயதுக்கு இடைப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக் காயம் காரணமாகவுள்ளது. அத்துடன், துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்தனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பிரதான வீதியோரத்தில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போது இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...