Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர்

T

The Leader Desk

ஜூலை 15, 2025 • 3:47 AM

இலங்கை பொலிஸாரின் அடாவடித்தனம் ; தீவிர சிகிச்சை பெரும் குடும்பஸ்தர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
  • ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.
  • பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
 

இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தரே தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம் மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்..

பளை - வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரை புலனாய்வாளர்கள் அழைத்து செல்ல முற்பட்டதாக தெரியவருகின்றது.

அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கி விட்டு தப்பித்துள்ளனர்.

இந்நிலையில், பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...