Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கடும்தொனியில் கூச்சலிட்ட எம்.பி அர்ச்சுனா ; சபை அமர்வில் குழப்ப நிலை

T

The Leader Desk

ஜூலை 11, 2025 • 9:29 AM

கடும்தொனியில் கூச்சலிட்ட எம்.பி அர்ச்சுனா ; சபை அமர்வில் குழப்ப நிலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
  • இருப்பினும் தொடர்ச்சியாக பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
  • இதன்போது கொள்கலன் தொடர்பான விடயங்களை தான் புலனாய்வுப்பிரிவிடம் 5 மணித்தியாலங்கள் செலவிட்டு கூறியதாக தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும், அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னரே சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 

பரிசோதனைகளின்றி கொழும்பு துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்றில் மோதல் வெடித்தது.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் கூறுவதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து சீற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் கடும்தொனியில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனையடுத்து அவர் மேலும் அதிகமாக சத்தமிட்டு பேசிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் பாராளுமன்றஉறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு பேசுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன்போது கொள்கலன் தொடர்பான விடயங்களை தான் புலனாய்வுப்பிரிவிடம் 5 மணித்தியாலங்கள் செலவிட்டு கூறியதாக தெரிவித்திருந்தார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடும்தொனியில் கூச்சலிட்ட எம்.பி அர்ச்சுனா ; சபை அமர்வில் குழப்ப நிலை | Tamil Leader | We Lead the Nation