Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சுகாதார சேவை என்பது வெறும் சேவை அல்ல, அது ஒரு சமூகத் தேவை

T

The Leader Desk

ஜூலை 7, 2025 • 8:26 AM

சுகாதார சேவை என்பது வெறும் சேவை அல்ல, அது ஒரு சமூகத் தேவை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
  • கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 5 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், "இது மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும், நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல.
  • சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
எழுத்து அளவு:

நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 5 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மருத்துவ சபையின் (SLMC) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நூற்றாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து, ஒரு உத்தியோகபூர்வ நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
"இது மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும், நமது நாட்டுக்கும் 100 வருட சேவை நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பம் மட்டுமல்ல. மருத்துவவியலில் நாம் உயிர்களுடன் பணியாற்றுவதால், இந்த பொறுப்பு மிகவும் தீர்க்கமானது. கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், கோவிட் பெருந்தொற்றின் போது மருத்துவ சேவை வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, இலங்கை சுகாதார அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது.
நமது மருத்துவக் கல்வியின் மூலம், மேலும் மனிதாபிமானமுள்ள, உணர்வுபூர்வமான, நெறிமுறை சார்ந்த முழுமையான மருத்துவர்களை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றிக் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை அடைந்ததற்காக இலங்கை மருத்துவ சபைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றுபோல் எதிர்காலத்திலும் உங்களுடன் இணைந்திருப்பதில் அரசாங்கம் பெருமை கொள்கிறது," எனத் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர்,

"நமது சுகாதார சேவை புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் காலத்திலேயே நாம் இருக்கிறோம். பழைய உறுதிப்பாடுகள் புதிய சிக்கலான விடயங்களுக்கு வழி வகுக்கின்றன. நாம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரபணு மருத்துவவியல் மற்றும் நாடுகளுக்கு இடையேயான மருத்துவ சேவை வழங்குதலை நோக்கிப் பயணிக்கும்போது, ஒழுங்குபடுத்தல் அதனுடன் முன்னேற வேண்டும். இலங்கை மருத்துவ சபை இந்த அழுத்தங்களைத் தாங்கி நிற்கவில்லை; உண்மையில் நாம் அதன் மத்தியிலேயே இருக்கிறோம்.

மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாமல், இலங்கையில் சுகாதார சேவைகளை வழங்குவதன் நோக்குநிலையை வடிவமைப்பதிலும் சுகாதார அமைச்சு இலங்கை மருத்துவ சபையை ஒரு முக்கிய பங்காளி எனக் கருதுகிறது. பல வருடங்களாக, உரிமம் வழங்குதல், கல்வித் தரநிலைகள், தொழில்முறை மேம்பாடு பராமரித்தல், நெறிமுறை மேற்பார்வை மற்றும் சுகாதாரப் பணியாளர் திட்டமிடல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம். இவை சிறிய பணிகள் அல்ல – நமது குடிமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவையின் தரம், பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை இந்த விடயங்களே தீர்மானிக்கின்றன." என்றார்.

இக்கூட்டத்தில் தூதுவர்கள், சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை மருத்துவ சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

பிரதம மந்திரி ஊடகப் பிரிவு

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...