Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழில் இரவிரவாகத் தொடரும் 'அணையா விளக்கு' போராட்டம்!

T

The Leader Desk

ஜூன் 24, 2025 • 3:44 PM

யாழில் இரவிரவாகத் தொடரும் 'அணையா விளக்கு' போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரவிரவாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குத் தேவையான மலர்கள், தேங்காய் எண்ணெய், விளக்குத் திரிகள் மற்றும் மின்பிறப்பிக்கான பெற்றோல் போன்றவற்றை மக்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என்று, 'அணையா விளக்கு' போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  • இந்நிலையில், இந்தப் போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் நாளை புதன்கிழமை வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • முரசு https://www.facebook.com/100037509187400/videos/1095736855750550.
எழுத்து அளவு:

இரவிரவாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குத் தேவையான மலர்கள், தேங்காய் எண்ணெய், விளக்குத் திரிகள் மற்றும் மின்பிறப்பிக்கான பெற்றோல் போன்றவற்றை மக்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என்று, 'அணையா விளக்கு' போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழிக்குச் சர்வதேச நீதி கோரி 'மக்கள் செயல்' அமைப்பின் ஏற்பாட்டில் 'அணையா விளக்கு' எனும் மூன்று நாள் தொடர் போராட்டம் யாழ். நல்லூர் வளைவுக்கு அருகில் நேற்றுக் காலை ஆரம்பமாகி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரவுப் பொழுதில் கதை படித்தல், ஆவணப்படம் திரையிடல் போன்றன இடம்பெறுகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப்  பாதிக்காத வகையில் நாளை புதன்கிழமை வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

"இந்தப் போராட்டத்துக்குத் தேவையான மலர்கள், தேங்காய் எண்ணெய், விளக்குத் திரிகள் மற்றும் மின்பிறப்பிக்கான பெற்றோல் போன்றவற்றைத் தரக்கூடியவர்கள் தந்து உதவுமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். போராட்டக் களத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான உணவு, நீர் வசதிகளையும் தரக்கூடியவர்கள் தந்து உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்." - என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

-முரசு

https://www.facebook.com/100037509187400/videos/1095736855750550 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...