Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அமெரிக்காவுக்கான பதிலடியை இஸ்ரேலுக்கு கொடுக்கிறது ஈரான்!

T

The Leader Desk

ஜூன் 23, 2025 • 4:26 AM

அமெரிக்காவுக்கான பதிலடியை இஸ்ரேலுக்கு கொடுக்கிறது ஈரான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.
  • ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.
  • இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எழுத்து அளவு:

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் - 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள்

மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.

ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது. இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. 2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன. இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில், 

''ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...