Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணியில் இன்று அணையா தீபம் ஏற்ற அனைவருக்கும் அழைப்பு!

T

The Leader Desk

ஜூன் 23, 2025 • 4:11 AM

செம்மணியில் இன்று அணையா தீபம் ஏற்ற அனைவருக்கும் அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சி பேதங்களைக் கடந்து நீதிக்காக அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இன்று காலை 10 மணிக்கு அணையாத தீபம் ஏற்றப்படும்.
  • அந்த தீபத்தை, தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் உறவினர், மதத் தலைவர்கள் ஏற்றி வைப்பர்.
எழுத்து அளவு:

கட்சி பேதங்களைக் கடந்து நீதிக்காக அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர் போராட்டமொன்று செம்மணியில் இன்று காலை ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து இந்தப் போராட்டம் மூன்று தினங்கள் இரவு பகலாக நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு அணையாத தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தை, தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் உறவினர், மதத் தலைவர்கள் ஏற்றி வைப்பர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெறும். 

இன்று மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பு அங்கு இடம் பெறும். இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடப்படும். 

செம்மணிச் சந்தையில் நின்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக சர்வதேசத்திடம் நீதி கேட்டு சர்வதேசத்தை அழைக்கும் அணையா விளக்குப் போராட்டத்திற்கு அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

இப் போராட்டத்திற்கு பல்வேறு பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தமது முழு ஆதரவை வழங்கியுள்ளமையுடன் அனைவரையும் அதிக் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோருகின்ற இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் பங்காளிகளாக இணைந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...