Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இன்று இலங்கைக்கு வருகிறார் ஐ.நா உயர்ஸ்தானிகர்!

T

The Leader Desk

ஜூன் 23, 2025 • 2:43 AM

இன்று இலங்கைக்கு வருகிறார் ஐ.நா உயர்ஸ்தானிகர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எழுத்து அளவு:

இன்று முதல் 26ஆம் திகதி வரை அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.  

இந்த விஜயத்தின் போது, ​​உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரையும் சந்திக்க உள்ளார். 

அத்தோடு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், மத தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை விஜயத்தின் போது, ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இந்தப் பயணத்தின் போது, ​​இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

மேலும், அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...