Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஹிருணிகாவுக்கு பிடியாணை

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2025 • 5:42 AM

ஹிருணிகாவுக்கு பிடியாணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது.
  • இந்த சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
  • அதன்படி, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் முன்னேற்றம் குறித்து ஜூன் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக முறைப்பாட்டை பதிவு செய்த கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி,  சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் முன்னேற்றம் குறித்து ஜூன் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்ததாக அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...