Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

2024 ஒக்டோபருக்கு முன் ஜனாதிபதித் தேர்தல்?

T

The Leader Desk

நவம்பர் 27, 2023 • 3:08 AM

2024 ஒக்டோபருக்கு முன் ஜனாதிபதித் தேர்தல்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதித்எதேர்தல் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
  • “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுவதற்குத் தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஆம்ஆண்டில் அரசமைப்பின்படி நடைபெறும்.
  • எனினும், 2024 ஆம் ஆண்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதித்எதேர்தல் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலையில் முடிவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தல் திகதியை முடிவு செய்யும் போது அரசமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுவதற்குத் தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் பிற ஆவணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற அடுத்தடுத்த பணிகள் வரும் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஆம்ஆண்டில் அரசமைப்பின்படி நடைபெறும். எனினும், 2024 ஆம் ஆண்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...