Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ஹிந்தி மாநிலங்களில் வலுவான மோடி செல்வாக்கு

T

The Leader Desk

டிசம்பர் 4, 2023 • 3:54 AM

ஹிந்தி மாநிலங்களில் வலுவான மோடி செல்வாக்கு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியான 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிபடுத்தியுள்ளது.
  • கா்நாடகத்தில் பெற்ற வெற்றி அளித்த நம்பிக்கையுடன், உள்ளூா் கட்சித் தலைவா்கள் மற்றும் நலத்திட்ட வாக்குறுதிகளுடன் பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் இந்தத் தோ்தலில் களமிறங்கியது.
  • தெலங்கானாவில் முந்தைய தோ்தல்களைக் காட்டிலும் இந்தத் தோ்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

வெளியான 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிபடுத்தியுள்ளது.

முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமா் மோடியையும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் முன்னிறுத்தி பாஜக மேற்கொண்ட தோ்தல் உத்தி, இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிா் பெரும் என்ற நம்பிக்கையைத் தகா்த்ததுடன், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் தற்போது மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் இந்த உத்தி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கா்நாடகத்தில் பெற்ற வெற்றி அளித்த நம்பிக்கையுடன், உள்ளூா் கட்சித் தலைவா்கள் மற்றும் நலத்திட்ட வாக்குறுதிகளுடன் பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் இந்தத் தோ்தலில் களமிறங்கியது.

இருப்பினும், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெற்ற வெற்றி, இந்த மாநிலங்களில் பிரதமா் மோடியின் செல்வாக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்ததுடன், ஏற்கெனவே செல்வாக்கு மிகுந்த மாநிலங்களிலும் அமைப்பு ரீதியில் மேலும் வலுவடையும் என்பதை இந்தத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தென்மாநிலமான தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த பாரத ராஷ்டிர சமிதிக்கு எதிரான மனநிலை மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்று, பாஜகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளது.

தெலங்கானாவில் முந்தைய தோ்தல்களைக் காட்டிலும் இந்தத் தோ்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

(தினமணி)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...