Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘ரணிலைத் தோற்கடிக்க துணைபோக மாட்டோம்’

T

The Leader Desk

டிசம்பர் 4, 2023 • 3:40 AM

‘ரணிலைத் தோற்கடிக்க துணைபோக மாட்டோம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம்.' - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமானபிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
  • அவர் மேலும் கூறுகையில், “நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13ஆம்திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கச் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
  • அந்த நிலைமை ஏற்பட மொட்டுக் கட்சி இடமளிக்காது.
எழுத்து அளவு:

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம்.' - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமானபிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் 13ஆம்திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பின்போது தோற்கடிக்கச் சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். அந்தச் சிலரின் சதித் திட்டம் வெற்றியளிக்காது. ஏனெனில் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் உள்ளார்கள்.

“வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசும் கவிழும். அந்த நிலைமை ஏற்பட மொட்டுக் கட்சி இடமளிக்காது. எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தப் பெருந்தலைவராகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்க்கின்றோம்.

“அவர் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க மறுத்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை படுமோசமடைந்திருக்கும். அவரை மாதிரி சிறந்த ஒரு தலைவர் இன்று இல்லை என்பதை நான் வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.' என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...