Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்

T

The Leader Desk

டிசம்பர் 2, 2023 • 12:34 PM

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  • குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத் தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம்.
  • “இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இந்த அரசு, ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.
எழுத்து அளவு:

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர்கள்,

“இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத் தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடி வருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

“இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இந்த அரசு, ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகப் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றார்கள். எனவே, ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்களாகிய நாம் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத் தரப்புக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “ஊடக சுதந்திரத்தை உறுதி செய், பொய் வழக்கு போடாதே, ஊடகப் படுகொலைக்கு நீதி வேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம்” போன்ற கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழைய பஸ் நிலையத்தை அடைந்து முற்றுப் பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், வவுனியா வர்த்தக சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(மாலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள் | Tamil Leader | We Lead the Nation