Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற டயனா, சுஜித், ரோஹனவுக்கு தடை

T

The Leader Desk

டிசம்பர் 1, 2023 • 8:28 AM

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற டயனா, சுஜித், ரோஹனவுக்கு தடை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை, ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு, நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • இது தொடர்பான முதலாவது அறிக்கை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் இன்று (01) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
  • எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை, ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு, நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான முதலாவது அறிக்கை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் இன்று (01) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் குழு, இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை 3 மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு பரிந்துரை செய்திருந்த போதிலும், அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அதனை ஒரு மாத காலத்திற்கு குறைத்துள்ளதாக சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கு சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார ஆகியோர் இது தொடர்பில் வாக்குவாதப்பட்டுக்கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...