Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

'ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா?: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு'

T

The Leader Desk

நவம்பர் 30, 2023 • 11:58 AM

'ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா?: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அது குறித்து இப்போது அவசரப்பட மாட்டேன்” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • இதன்போதே ஜனாதிபதி மேற்படி பதிலை வழங்கினார் என்று அந்த அமைச்சர்கூறினார்.
  • 'ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது.
எழுத்து அளவு:

எடுப்பேன். அது குறித்து இப்போது அவசரப்பட மாட்டேன்” என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

'ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிவது தொடர்பில் விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாது. அவரின் கருத்தைத் தூக்கி வீசுங்கள்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும் ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைப் பெற்று ஓய்வுகாலத்தைக் கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.

விமலின் இந்தக் கருத்து தொடர்பில் நேற்று ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலின் போது பேசப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்படி பதிலை வழங்கினார் என்று அந்த அமைச்சர்கூறினார்.

“ஆளும் கட்சியிலிருந்து எதிரணிப்பக்கம் பாய்ந்தவர்களும், எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களும் எனது அரசியல் பயணத்தை ஏதோவொரு வழியில் முடக்க முயற்சிக்கின்றனர். அவர்களால் எனது அரசியல் பயணத்தை ஒருபோதும் முடக்க முடியாது. நீங்களும் (ஆளும் கட்சியின் முக்கியஸ்தார்கள்) அவர்களின் பொறிக்குள் சிக்கிவிடாதீர்கள். அரசியலில் நான்தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என நான் தான் முடிவு எடுப்பேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டார் என்றும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(மாலைமுரசு)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா?: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு' | Tamil Leader | We Lead the Nation