Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காகவே துவாரகா பிரபாகரனின் காணொளி உருவானது’

T

The Leader Desk

நவம்பர் 30, 2023 • 3:11 AM

‘இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காகவே துவாரகா பிரபாகரனின் காணொளி உருவானது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியான காணொளி போலியானது என்றும் அந்த காணொளி வேறொரு பெண்ணின் காணொளி என்றும் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
  • எவ்வாறாயினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர், அது போலியானது என தெரிவித்துள்ளனர்.
  • மாவீரர் நாளன்று மாலை வெளியாகிய அந்த காணொளியில் பிரபாகரனின் மகள் உயிருடன் இருப்பதாகவும் ஏ.ஐ தொழிநுட்பங்கள் மூலம் தொடர்புகொள்வதாகவும் புலிகள் அமைப்பினர் கூறியுள்ளனர்.
எழுத்து அளவு:

வெளியான காணொளி போலியானது என்றும் அந்த காணொளி வேறொரு பெண்ணின் காணொளி என்றும் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் நாளன்று மாலை வெளியாகிய அந்த காணொளியில் பிரபாகரனின் மகள் உயிருடன் இருப்பதாகவும் ஏ.ஐ தொழிநுட்பங்கள் மூலம் தொடர்புகொள்வதாகவும் புலிகள் அமைப்பினர் கூறியுள்ளனர். அத்துடன் அமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர், அது போலியானது என தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் தனது வாழ்நாளில் தனது குடும்ப உறுப்பினர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்கவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரின் போது இறந்துவிட்டார்கள் என்றும் இது, ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பான காணொளி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பெருமளவு பணம் வசூலித்துள்ளதாகவும் இலங்கைப் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காகவே துவாரகா பிரபாகரனின் காணொளி உருவானது’ | Tamil Leader | We Lead the Nation