Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் நியமனம்

T

The Leader Desk

நவம்பர் 29, 2023 • 7:54 AM

பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் நியமனம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிபர் தேசபந்து தென்னக்கோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக, பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாகவும் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அதிபர் தேசபந்து தென்னக்கோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான டிரான் அலஸ் ஆகியோரும் கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் பதவியில் நீண்ட காலமாக பணியாற்றிய சி.டி.விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதில் பல்வேறு பிணக்குகள் அண்மைக்காலத்தில் அரங்கேறியிருந்தன.

முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக, பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாகவும் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் உண்மையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கே நியமன அதிகாரம் உண்டு, அதன்படி நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

இந்த அரசிலமைப்பு சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், இதில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் நியமனம் | Tamil Leader | We Lead the Nation