Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தோற்றம் குறித்து மஹிந்த விளக்கம்

T

The Leader Desk

நவம்பர் 28, 2023 • 3:22 PM

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தோற்றம் குறித்து மஹிந்த விளக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையிலான அறிக்கையொன்றை ஸ்ரீ லங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
  • இந்த பின்னணியில், யுத்தத்துக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக இருந்ததாகவும் யுத்தத்தின் பின்னரான தமது ஆட்சிகாலத்தின் போது அது 6.8 வீதமாக அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இதன்படி, 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 819 அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 474 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையிலான அறிக்கையொன்றை ஸ்ரீ லங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு வெளிக்காரணங்கள் எதுவும் இல்லை எனவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் குறைவடைந்தமையே அதற்கான முக்கிய காரணி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் குறித்து அண்மை நாட்களில் பெருமளவில் பேசப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த பின்னணியில், யுத்தத்துக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக இருந்ததாகவும் யுத்தத்தின் பின்னரான தமது ஆட்சிகாலத்தின் போது அது 6.8 வீதமாக அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 819 அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மூவாயிரத்து 474 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2015ஆம் ஆண்டு பாரிய வளர்ச்சியடைந்திருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள் இருந்ததாகவும், தாம் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி 4.2 வீதமாக குறைவடைந்திருந்ததாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு கடன் 28 வீதத்தால் அதிகரித்திருந்ததாகவும் இதற்கமைய மொத்த வெளிநாட்டு கடன் 54 ஆயிரத்து 811 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்ற போது, பொருளாதாரம் ஏற்கனவே பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்ததாகவும், இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக அந்த நிலை மேலும் மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சரியான தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில், மக்கள் தங்கள் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவை பொய் பிரச்சாரங்களை அடிப்படையாக கொண்டிருக்க கூடாதெனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களும் அவரது சகாக்களும் காரணமென நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் இதுவரை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தோற்றம் குறித்து மஹிந்த விளக்கம் | Tamil Leader | We Lead the Nation