Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட ரொஷான் அதிரடி அறிவிப்பு

T

The Leader Desk

நவம்பர் 27, 2023 • 1:49 PM

அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட ரொஷான் அதிரடி அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
  • இன்று (27) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவிடம் கையளித்தார்.
  • “நான் எங்கிருந்தாலும், நல்லதுக்கு துணை போவேன்.
  • இது தான் கடந்த 50 வருடங்களாக நடந்துவருகிறது.
எழுத்து அளவு:

பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று (27) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவிடம் கையளித்தார்.

இலங்கையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இன்று இரவு பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமைச்சின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ள ரொஷான் ரணசிங்க, அங்கிருந்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

“ஆசியாவின் தீவாக இருந்த நாம், இன்று ஆசியாவின் கள்வர்களாக மாறியிருக்கிறோம். ஒரு வகையில் பார்த்தால், இன்று கள்வர்கள் வெற்றிபெற்று விட்டார்கள்.

“அமைச்சராக இருந்துகொண்டு இந்த ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவேன், அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு தடுத்து நிறுத்துவேன் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு இந்த ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவேன் என்று கூறிக்கொள்கிறேன்.

“நான் எங்கிருந்தாலும், நல்லதுக்கு துணை போவேன். இப்போது இருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்யவே இவருக்கு நாம் ஒப்படைத்தோம். அதைச் சரி செய்ததும், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அடுத்த அரசாங்கத்திடமே உள்ளது.

“எவ்வாறாயினும், அரசியல் ரீதியில் நான் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. பதவிகள் இருப்பது பணிகளைச் செய்வதற்கே. அதற்காகத்தான் பொலன்னறுவை மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது பதவியில் நான் எனது பணிகளைச் செய்ய முடிந்தளவுக்கு முயற்சி செய்தேன்.

“அதன்போது ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும்போது, இவ்வாறான முடிவுகள்தான் கிடைக்கும். இது தான் கடந்த 50 வருடங்களாக நடந்துவருகிறது. அதனால்தான் இந்நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று, அமைச்சின் முன்னாள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...